எந்த ராசிக்காரர்கள் வெற்றிலை வழிபாட்டை செய்யவேண்டும்....?

ஞாயிறு, 9 மே 2021 (00:16 IST)
வெற்றிலைக்கு ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் எண்ணற்ற பயன்கள் இருக்கிறது. வெற்றிலையில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். அனைத்து  சுபகாரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலையை எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கஷ்டங்கள் தீரும் என்று இப்பதிவில் காணலாம்.
 
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் முருக பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று பூஜையில் இரண்டு வெற்றிலை வைத்து அதன் மீது மாம்பழம் வைத்து வழிபட  வேண்டும். 
 
 
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் ராகு பகவானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு சென்று இரண்டு வெற்றிலையுடன் 9 மிளகு வைத்து வழிபாடு செய்து வர  வேண்டும்.
 
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் புதன் கிழமை அன்று உங்களது குலதெய்வத்திற்கு இரண்டு வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபாடு செய்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் தீரும். 
 
கடகம்: கடக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் மாதுளம்பழம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வந்து அதனை  உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கி நலம் கிட்டும். 
 
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் வியாழன் அன்று உங்களது இஷ்ட தெய்வத்தை பூஜைக்கு தயார் செய்து அவர் முன் இரண்டு வெற்றிலையுடன் வாழைப்பழம் வைத்து பூஜை செய்து அதனை உட்கொண்டால் தீராத துன்பங்கள் தீரும்.
 
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் வியாழன் அன்று உங்களது இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து இரண்டு வெற்றிலையுடன் 27 மிளகு வைத்து உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும்.
 
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று குலதெய்வத்தை பூஜித்து இரண்டு வெற்றிலையுடன் கிராம்பு வைத்து வழிபாடு செய்து பின்னர் அதனை உட்கொண்டால் பிரச்சனைகள் நீங்கி இல்லம் அமைதி அடையும்.
 
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையை துதித்து இரண்டு வெற்றிலையுடன் பேரீச்சம் பழம் வைத்து வழிபட்டு உட்கொண்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.
 
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் வியாழன் கிழமை அன்று முருகனுக்கு இரண்டு வெற்றிலையுடன் சிறிது கற்கண்டு வைத்து வழிபட்டு அதனை உட்கொண்டால்  கஷ்டங்கள் நீங்கும். நிம்மதி கிடைக்கும்.
 
மகரம்: மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் அச்சுவெல்லம் சேர்த்து வழிபாடு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து  அதனை உட்கொண்டால் துன்பங்கள் நீங்கும்.
 
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் நெய் சிறிது சேர்த்து வழிபாடு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து  அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும்.
 
மீனம்: மீன ராசிக்காரர்கள் ஞாயிரு அன்று இஷ்ட தெய்வத்தை பூஜைக்கு தயார் செய்து அவர் முன் இரண்டு வெற்றிலையுடன் சர்க்கரை சிறிது வைத்து பூஜை  முடிந்ததும் அதனை உட்கொள்வதால் சகல பிணிகளும் தீரும். நிம்மதி கிடைக்கும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்