கோவை ஸ்ரீ காவல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Mahendran

வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (18:15 IST)
கோவை வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் துறை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காவல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், பக்தி உணர்வையும் ஏற்படுத்தியது.
 
கும்பாபிஷேக விழா கடந்த 9-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, நான்காம் கால பூஜைகள் நிறைவடைந்த பிறகு, யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
 
காலை 8 மணிக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமிகள் ஆகியோர் தலைமையில், மங்களகரமாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
 
விழா ஏற்பாடுகளை காவல்துறை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சிறப்பாக செய்திருந்தனர். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்