இந்தியா கூட்டணி வெல்லும் வகையில் அயராது உழைப்போம்!- உதயநிதி ஸ்டாலின்

Sinoj

திங்கள், 22 ஜனவரி 2024 (08:03 IST)
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே நாடு முழுவதும் கூட்டணி குறித்து, தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுகவும், தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே திமுக நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில், சேலத்தில் பிரமாண்டமாக இளைஞர் அணி மா நாடு நடைபெற்றது.

இதற்கு முன்னதாக தேர்தல் தொகுதிப் பங்கீட்டிற்காக குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், இக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் , அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

''2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.கழகத்தின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்துள்ளார்கள்.

அதில், தேர்தலுக்கான கழகப் பணிகளை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில் மாண்புமிகு அமைச்சர் - கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் கே.என். நேரு, கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆர்.எஆ.பாரதி
, மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் எ.வ.வேலு, அண்ணன்  தங்கம் தென்னரசு  ஆகியோருடன் நாமும் இடம்பெற்றுள்ளோம்.

இக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டத்தை கழகத்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் இன்று தொடங்கினோம்.

குழுவின் சார்பில் தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரையறுப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். 

நாடும் நமதே, நாற்பதும் நமதே! இந்தியா கூட்டணி வெல்லும் வகையில் அயராது உழைப்போம்!''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்