கலப்பட உணவான்னு இலவசமா தெரிஞ்சிக்கலாம்! – நடமாடும் உணவு ஆய்வகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (11:11 IST)
உணவில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய பொதுமக்களுக்காக இலவச நடமாடும் உணவு பரிசோதனை வாகனங்கள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சமீப காலமாக கலப்பட உணவுகளால் மக்கள் பாதிக்கப்படுவது பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கும் உணவுகளை இலவசமாக பரிசோதித்துக் கொள்ள நடமாடும் உணவு ஆய்வு வாகனங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக இரண்டு உணவு ஆய்வு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 12ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் 4 வாகனங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இந்த நடமாடும் உணவு ஆய்வு வாகனம் செயல்பட்டு வருகிறது. உணவகங்களில் வாங்கும் உணவு, குளிர்பானம் உள்ளிட்டவற்றில் கலப்படம் இருப்பதாக வாடிக்கையாளர்கள் சந்தேகித்தால் அந்த உணவு மாதிரிகளை நடமாடும் உணவு ஆய்வு வாகனத்தில் கொடுத்து கலப்படம் குறித்த உண்மை நிலையை அறியலாம். உணவு கலப்படம் குறித்த புகார்களை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸப் வாயிலாகவும் புகாராக தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்