ஆன்லைன் மூலம் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்கலாம்: முதல்வர் அறிவிப்பு!

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:15 IST)
ஆன்லைன் மூலம் டிரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பது உள்பட ஒரு சில சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
 தமிழக முதல்வராக பதவியேற்ற மு க ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இணையதளம் வாயிலாக ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பது உள்பட சில சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
ஆதார் அட்டையை பயன்படுத்தி பிரத்யேக இணையதளம் வழியாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சேவையை சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்