மறைந்த விஜயகாந்த் படத்திறப்பு விழா.! நினைவேந்தல் நிகழ்ச்சி.!!

Senthil Velan

புதன், 24 ஜனவரி 2024 (19:51 IST)
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இதை அடுத்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது நினைவிடத்தில் நாள்தோறும்  மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் விஜயகாந்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்