வாராக் கடன்கள் அதிகமானதாகவும் நிதி நிர்வாகம் மிகவும் மோசமாக இருந்ததாலும் லட்சுமி விலாஸ் வங்கிக்கு திடீரென மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது. அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
ஆனால் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆர்பிஐ அமைப்பு, லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும் உங்களுடைய நன்மைக்காகவும் வங்கியின் நன்மைக்காகவும் தான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது