உங்க அம்மாவ பத்தி பேசுனா கம்முன்னு இருப்பியா? வாயைவிட்டு மாட்டிய நபர்: பொளந்துகட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்

திங்கள், 21 ஜனவரி 2019 (14:43 IST)
இந்துகடவுளை பற்றி தப்பாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். 
 
அந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு  தைரியமாகவும், வெளிப்படையாகவும் குரல் கொடுத்தவர் லட்சுமி. மேலும்  சமூகவலைத்தளங்களிலும் குற்றங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார் . ‘அம்மணி’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஆரோகனம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். 
 
இந்நிலையில் சென்னையில் தனியார் கல்லூரியில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அவலங்கள் குறித்து நடைபெற்ற நிகழ்வில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக வரைபடங்கள் இருந்ததாக தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த லஷ்மி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிவீட் போட்டார்.
 
இதனால் என்ன ஆபத்து என நபர் ஒருவர் லஷ்மியிடம் கேள்வி கேட்க, ஆத்திரமடைந்த அவர், உங்க அம்மாவ திட்டுனா அமைதியா இருப்பீங்களா? என் மதம் என்பது என் தாய். என் மதத்தை நேசிக்கிறேன், அதேபோல் மற்ற மதத்திற்கு மரியாதை கொடுக்கிறேன். இவ்வாறு மற்ற மதத்தை சித்தரித்து கீழ்த்தரமாக செய்வது அருவருக்கதக்க செயல் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்