பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல்மாக அமைக்கப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று சட்ட அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் எதிர்கட்சியினரிடம் ஓரளவு வரவேற்றுள்ளனர்.