ஒரு இடத்தில் விபத்து நேர்கிறது என்றாலோ அல்லது ஒருவருக்கு உடல் நிலையில் திடீரென கோளாறு ஏற்படுகிறது என்றாலோ நமக்கு ஞாபகம் வருவது 108 ஆம்புலன்ஸ் தான். எனினும் ஆம்புலன்ஸ் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரத்திலிருந்து அல்லது எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பது குறித்தான பதற்றம் நமக்கு அந்நேரத்தில் ஏற்படும்.
இந்நிலையில் ஓலா, ஊபர் ஆகிய டாக்சிகளை போல, 108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய செயலி தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 2 மாதத்திற்குள் இச்செயலி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.