தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் ஏந்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை புலியங்குளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது சுட்டிக்காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “ஸ்டாலின் தற்போது வேலை ஏந்திவிட்டதால் முருகன் அவருக்கு வரம் அளிக்கமாட்டார். முருகனின் அருள் என்றும் அதிமுகவிற்குதான் உண்டு” என பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.