காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் சேர்ந்த குஷ்புவுக்கு பாஜக தலைமை இரண்டு ஆப்சன்கள் கொத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒன்று மயிலாப்பூர் தொகுதியில் பாஜகவின் எம்எல்ஏ வேட்பாளர். இரண்டாவதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் ராஜ்யசபா எம்பி வேட்பாளர். இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவருக்கு ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
வரும் சட்டமன்ற தேர்தலில் குஷ்புவை ஒரு தொகுதியில் அதாவது மயிலாப்பூர் தொகுதியில் நிறுத்தினால் அந்த தொகுதியில் மட்டுமே அவரால் கவனம் செலுத்த முடியும் என்றும் அதனால் அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்துக்கு செல்ல முடியாது என்றும் குஷ்பு போன்ற ஒரு பிரபலம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தால் பாஜகவுக்கு கூடுதல் பலம் இருக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் கருதுகிறார்.
எனவே எல் முருகனின் கோரிக்கையின்படி குஷ்பு, மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேட்பாளர் ஆப்சனை தேர்வு செய்ய மாட்டார் என்றும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.