சாரி ராகுல் ஜி: பாஜகவில் இணைவது குறித்து குஷ்பு ஓபன் டாக்!!

வெள்ளி, 31 ஜூலை 2020 (15:02 IST)
புதிய கல்வி கொள்கையை குஷ்பூ ஆதரித்துள்ளதால் அவர் பாஜகவில் இணைய உள்ளார் என்ற செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.  
 
நடிகை குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திமுகவிலிருந்து வெளியேறினார். 
 
அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல் காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். 
 
இந்நிலையில் பாஜக அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை ஆதரித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவர் பாஜகவில் சேர உள்ளார் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதற்கு பதிலும் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
புதிய கல்விக் கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்பதால் அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுபவலாக இருக்கிறேன்.  
 
தான் பாஜகவுக்கு செல்லவில்லை. என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம். ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்