தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு தேர்வு: குமரி காவலர்களின் அசத்தல் ஐடியா

சனி, 28 மார்ச் 2020 (17:09 IST)
தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு தேர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவில் கடந்த 4 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மக்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதையும் மீறி ஒரு சிலர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களை காவல்துறையினர் அடித்து நொறுக்கும் காட்சிகளையும் நாம் வீடியோ மூலம் காண முடிகிறது
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவின்போது தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை தடுத்து நிறுத்தும் கன்னியாகுமரி காவல்துறையினர் அவர்களுக்கு நூதனமான தண்டனை வழங்கி வருகின்றனர். அதாவது அவர்களுக்கு 10 கேள்விகள் கொண்ட தேர்வை நடத்துகின்றனர். இந்த தேர்வில் அவர்கள் பெயில் ஆகி விட்டால் 10 தோப்பு கரணம் போட வேண்டுமென்றும் அவர்களுக்கு தண்டனை விதித்து உள்ளனர். அந்த பத்து கேள்விகள் இவைதான்:
 
1. கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது?
 
2. கொரோனா வைரஸின் காதலி பெயர் என்ன?
 
3. கொரோனா வைரஸினால் அதிகமாக பாதிக்கப்படும் உடலமைப்பு மண்டலம் எது?
 
4. கொரோனா வைரஸ் ஊரடங்கு சட்டத்தை அலட்சியப்படுத்தியதால் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட நாடு எது?
 
5. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
 
6.  கொரோனா வைரஸிலிருந்து நம் நாட்டை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
 
7.  கொரோனா வைரஸ் சம்பந்தமாக ஊரடங்கு சட்டம் என்று வரை போடப்பட்டுள்ளது?
 
8.  கொரோனா சம்பந்தமாக அரசு எடுத்த நடவடிக்கை மீறுபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன?
 
9.  கொரோனா தொற்று அறிகுறி என்ன? 
 
10.  சமூக விலகல் என்றால் என்ன?
 
இந்த 10 கேள்விகளுக்கும் ஊரை சுற்றி திரியும் நபர்கள் பதில் அளிக்காவிட்டால் 10 தோப்பு கரணம் போடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்