அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை, பிரதமர் கட்டுப்படுத்த வேண்டும்: கேபி முனுசாமி

Siva

ஞாயிறு, 28 ஜனவரி 2024 (08:08 IST)
வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலையை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிமுக துணை பொச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
 
நேற்று கிருஷ்ணகிரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே. பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜக தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பின் தெரிந்துவிடும் அண்ணாமலையும் அதை உணர்வார். 
 
தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என பேசும் அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் போது மாணவராக இருந்து இருப்பார். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர் வரலாற்றை பிழையோடு கூறக்கூடாது. 
 
அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பாஜகவை பின்னிலைப்படுத்தி பேசி வருகிறார். அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. தலை சிறந்த தலைவர் நரேந்திர மோடி என கூறி அவரது நற்பெயரை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்.
 
பிரதமர் இதை புரிந்து கொண்டு அவருடைய பேச்சை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேபி முனுசாமி பேசினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்