சிபிஎம் எம்.எல்.ஏ. வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

திங்கள், 20 மார்ச் 2023 (18:58 IST)
கேரளாவில் சிபிஎம் வெற்றி செல்லாது என அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கேரள மாநிலம் தேவிகுளம் என்ற சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளராக ராஜா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிபிஎம் எம்எல்ஏ ராஜா வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ராஜா தனி தொகுதியான தேவி குளத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்ற அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் 
 
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் சற்று முன் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் கேரளா எம்எல்ஏ ராஜா வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்