நாடாளுமன்ற சீட்டை விற்பனை செய்கிறார் ஜிகே வாசன்.. தமாகவில் இருந்து விலகியவர் பரபரப்பு தகவல்..!

Mahendran

திங்கள், 25 மார்ச் 2024 (10:13 IST)
பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ள ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற சீட்டை விற்பனை செய்து வருவதாக அக்கட்சியில் இருந்து விலகிய ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது என்பதும் அக்கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது

ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று தொகுதிகளில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதும் ஈரோடு தொகுதியில்  விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில்  போட்டியிட தான் வாய்ப்பு கேட்டிருந்ததாகவும் ஆனால் தனக்கு வாய்ப்பு தரவில்லை என்று அந்த கட்சியில் இருந்து விலகிய கதிர்வேல் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜி கே வாசன் மூன்று சீட்டுகளை கோடிக்கணக்கில் விற்று விட்டார் என்றும் அதனால் தான் அந்த கட்சியில் இருந்து நான் விலகி விட்டேன் என்றும் கட்சி தலைமைக்கு எனது முடிவை முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்துவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்

இனிமேலும் இந்த கட்சியில் பயணம் செய்ய நான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ள நிலையில் அவர் கூறிய குற்றச்சாட்டு என பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்