ஓமன் கடலில் 13 இந்தியர்கள் மாயம்.. விரைகிறது இந்திய போர் கப்பல் மற்றும் விமானம்..!

Mahendran

புதன், 17 ஜூலை 2024 (13:57 IST)
ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் திடீரென கவிழ்ந்ததில் அந்த கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமாகியுள்ளதை அடுத்து இந்தியர்களை மீட்க இந்திய போர் கப்பல் மற்றும் விமானம் விரைகிறதாக உள்ளன

ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 இந்தியர்கள் மற்றும் மூன்று இலங்கையை சேர்ந்தவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் அவர்களை தேடும் பணியில் ஓமன் கப்பல் படை ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் காணாமல் போன 13 இந்தியர்களை கண்டுபிடிக்க இந்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது இந்திய போர் கப்பல் மற்றும் விமானம் ஓமன் கடல் பகுதிக்கு விரைந்து உள்ளதாகவும் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விபத்து நடந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆகும் நிலையில்  காணாமல் போன இந்தியர்கள் உயிருடன் இருப்பார்களா? அவர்களை இந்திய போர்க்கப்பல் மீட்டு கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்