கரூர் கலெக்டர், எஸ்பி இடமாற்றம்: அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டார்களா?

வியாழன், 1 ஏப்ரல் 2021 (19:33 IST)
கரூர் கலெக்டர், எஸ்பி இடமாற்றம்
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காரணத்தால் தேர்தல் ஆணையம் அவ்வப்போது கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களை இடமாற்றம் செய்து வருகிறது 
 
ஏற்கனவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்ற தகவல்களை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகிய இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
 
கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவருக்கு பதிலாக பிரசாந்த் வடநேரே என்பவர் கரூர் கலெக்டர் ஆக செயல்படுவார் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
அதேபோல் கரூர் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக  சஷாங் சாய் என்பவர் எஸ்பியாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்