தூய்மை பணியாளர்ளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கரூர் நகரத்தார் டிரஸ்ட்

சனி, 9 மே 2020 (21:30 IST)
தூய்மை பணியாளர்களான துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கரூர் நகரத்தார் டிரஸ்ட் - 150 பேருக்கு நலத்திட்ட உதவிப்  பொருட்கள் வழங்கினர்.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் சன்னதி தெருவில் அமைந்துள்ள கரூர் நகரத்தார் சங்க கட்டிடத்தில், கரூர் நகரத்தார் டிரஸ்ட் சார்பில் கரூர் நகராட்சியில் பணியாற்றும் 150 துப்புரவு பணியாளர்களான தூய்மை காவலர்களுக்கு கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் கொடுக்கப்பட்டது.

கரூர் நகரத்தார் டிரஸ்ட் தலைவர்  சுப.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அச்சங்கத்தின் செயலாளர் மேலை பழநியப்பன்,  பொருளாளர் கும.குமரப்பன் நகராட்சி அலுவலர்கள் தங்கராசு தனபால் நகரத்தார் சங்க செயற்குழுவினர் கரு.ரெத்தினம், வைஷ்ணவி மெய்யப்பன் அமர்ஜோதி ஆறுமுகம் அருணாசலம் முன்னிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம்,  காமராஜ் மார்க்கெட்டி ஐ சார்ந்த 150 துப்புரவு  தொழிலாளர்களுக்கு  முகக் கவசம், அரிசி மற்றும் உணவுப் பொருட்களும், டீத்தூள் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக சங்கம் சார்பில் துப்புரவு தொழிலாளர் களுக்கு கர ஒலி எழுப்பி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்