கருணாநிதியின் முதல் தொகுதிக்கு வந்த சோதனை!

திங்கள், 25 ஜூன் 2018 (19:26 IST)
குளித்தலை சட்டமன்ற அலுவலகம் இரண்டு வருடங்களாக திறக்கப்படாமலும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மக்கள் குறை தீர்க்க அலுவலம் வருவதில்லை என்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியின் அலுவலகம் குளித்தலை காவிரிநகர் பகுதியில் உள்ளே அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் வெளிகேட்டானது எப்போதும் திறந்தே இருக்கும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராமர் அவர்கள் இரண்டு வருடங்களாக மக்கள் குறை தீர்க்க மனுக்கள் வாங்க வருவதில்லை என்பதால் இந்த அலுவலகத்தின் வளாகம் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், அங்கே மது அருந்திவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

பல மாதங்களாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டியே உள்ளது. இந்த அலுவலகம் இரண்டுமுறை மட்டுமே திறக்கப்பட்டுள்ளாதகவும், குளித்தலை தொகுதி மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசவேண்டும் என்றும், சட்டமன்ற அலுவலகத்தை வாரம் ஒரு முறையாவது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று பரீசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், குளித்தலை புதிய பேருந்துநிலையம் அமைக்கவும், உழவர்சந்தை செல்லும் உள்புறவழிச்சாலையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரியும், குளித்தலையில் தீ அணைப்பு நிலையம் அமைக்க கோரியும், குளித்தலை-மணப்பாறை செல்லும் சாலையின் இரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்து தரகோரியும், குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவர்களையும் ஊழியர்களையும் அதிகப்படுத்திட நடவடிக்கை எடுக்கவும் என பல்வேறு கோரிக்கைகளை மனுக்களில் குறிப்பிட்டு குளித்தலை சட்டமன்ற அலுவலம் சுவற்றில் ஒட்டிவைத்தனர் எப்போதாவது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்தால் இந்த மனுவை பரீசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குளித்தலை பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய தமிழகத்தின் எதிர்கட்சியாக உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி முதன் முதலில் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிதான் இந்த குளித்தலை சட்டமன்ற தொகுதி என்பதும், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் குளித்தலை மட்டும்தான் இன்று வரை தி.மு.க.வின் கோட்டையாக உள்ள நிலையில், இந்த தி.மு.க எம்.எல்.ஏ ராமர் என்பவருடைய செயல்பாட்டினால் கட்சியில் பெரும் கவலநிலை நீடித்துள்ளது.
 

                                                                                                                    -Anadakumar(Karur)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்