3வது அணியில் திமுக இடம் பெறுகிறதா?- துரை முருகன் பேட்டி

திங்கள், 25 ஜூன் 2018 (12:53 IST)
மூன்றாவது அணியில் திமுக இடம்பெறாது என துரைமுருகன் சூசகமாக தெரிவித்தார்.

 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து, பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.  இது தொடர்பாக சந்திரசேகர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.
 
இதனால், காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், காங்கிரஸுடனான கூட்டணியை திமுக முறித்துக்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஒருபக்கம், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். எனவே, புதிதாக ஒரு அணி உருவாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், 3வது அணியில் திமுக இடம் பெறாது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தே திமுக தேர்தலில் போட்டியிடும் என கூறினார். துரைமுருகனின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தரப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்