இந்த நிலையில் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி வாழ்த்து சொல்வது போல் AI வீடியோ ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் பறிபோன மாநிலங்களின் உரிமையை மீட்க இந்த மாநாடு உதவும் என்றும் பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் மாநிலங்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும் கருணாநிதி அவர்கள் பேசுவது போலவே உள்ளது. இந்த வீடியோவை திமுகவினர் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்