''உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம்''- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்

செவ்வாய், 13 ஜூன் 2023 (13:04 IST)
தவறுதலாக உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

எல்லா நடவடிக்கைகளும் இந்தியில்தான் இருக்க வேண்டுமென்று நியூ  இந்தியா அஸ்யூரன்ஸ்   நிறுவனம் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

இதற்கு, முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி,   சு.வெங்கடேசன் எம்பி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து,  அனைத்து நடவடிக்கைகளும் இந்தியில்தான் இருக்க வேண்டுமென்று ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதற்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் அறிவித்துள்ளதாவது:

தவறுதலாக உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

pic.twitter.com/CWAgc2GsBF

— New India Assurance (@NewIndAssurance) June 13, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்