கார்த்திகை பௌர்ணமி தரிசனம்; சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Prasanth Karthick

வெள்ளி, 19 ஜனவரி 2024 (10:26 IST)
சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், பௌர்ணமி தரிசனத்திற்கு 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் புகழ்பெற்ற சிவன் ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வது வழக்கமாக உள்ளது.

வனத்துறை வட்டத்திற்குள் இருக்கும் இந்த சதுரகிரிக்கு செல்ல மாதம்தோறும் வனத்துறை 4 நாட்கள் மட்டும் அனுமதி அளிக்கிறது. அந்த வகையில் தற்போது கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியையொட்டி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு ஜனவரி 22 முதல் 25 வரை 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையேறும் பக்தர்கள் அங்கு பிளாஸ்டிக் பொருட்களை வீசவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்றும், இரவில் மலையில் தங்குவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்