தமிழக ஊர்திகள் அனுமதி மறுத்ததற்கு முறையான காரணம் கூற வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:20 IST)
தமிழக ஊர்திகள் அனுமதி மறுக்கப்பட்டதற்கு முறையான காரணம் வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழக எம்பிக்கள் குடியரசு தினத்தன்று விழாவை புறக்கணிப்பார்கள் என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
ஜான்சி ராணியை முன்னிறுத்தும் மத்திய அரசு, அவருக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னால் போராடிய வேலு நாச்சியாரை ஏன் புறந்தள்ள வேண்டும். ஒவ்வொரு தருணத்திலும் தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாஜக அரசு மட்டம் தட்டுகிறது
 
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததற்கு முறையான காரணம் கூறாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தினத்தை புறக்கணிக்க வேண்டும்
 
கீழடி போன்ற சரித்திர சான்றுகளையும் மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய நினைக்கிறது.”
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்