தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம்: வைரமுத்து

செவ்வாய், 18 ஜனவரி 2022 (08:09 IST)
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தியை புறக்கணிப்பது மத்திய அரசின் அதிகாரம் என்றும் ஆனால் அதற்கான காரணங்கள் சரியில்லை என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 
 
ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் தினத்தில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் மத்திய அரசை கண்டித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை.
 
வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது.
 
திருத்துவற்கு நேரமிருக்கிறது;
எங்களுக்கும் 
பொறுமை இருக்கிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்