காரைக்குடி அருகே உள்ள பனங்குடி என்ற கிராமத்தில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்கள் பலர் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் அதிகமாக இந்து மக்கள் இருந்தாலும் இஸ்லாமிய மக்களுக்கு பள்ளிவாசல் ஒன்று நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அந்த கிராமத்தில் இருந்த அந்த பள்ளிவாசல் சிதிலமடைந்திருந்த நிலையில் அதை சீர்செய்யும் நடவடிக்கை குறித்து ஜமாத் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த இந்து, கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்ட நிலையில் அனைவரும் சேர்ந்து பள்ளிவாசலை சீரமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.