கன்னியாகுமரி பாதரியார் பெனடிக் ஆன்றோவிற்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (16:29 IST)
பாலியல் புகாரில் சிக்கி கைதான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்காடு என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயது பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது அடுத்து அவரது லீலைகள் அம்பலமாகின.,
மேலும் அவர் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக் ஆன்றோ ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த ஜாமீன் மனு என்று நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனை அடுத்து பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிரியார் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை விரைவில் முடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.