ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாத லட்சக்கணக்கானோர் கால்நடையாகவும் இருசக்கர வாகனங்களிலும் சென்று கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தெலுங்கானாவில் இருந்து கன்னியாகுமரி வரை 1200 கிலோமீட்டர் வரை பயணம் செய்த பொறியாளர் ஒருவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது எ
தெலுங்கானா மாநிலத்தில் பொறியாளராக பணிபுரிந்த ஜெயபிரகாஷ் என்ற 24 வயது இளைஞர் ஊரடங்கு காரணமாக பசியால் வாடியுள்ளார். இதனையடுத்து அவர் தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்ற பகுதிக்கு செல்ல முடிவு செய்தார். 1200 கிலோ மீட்டருக்கு இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த அவர் நான்கு நாட்கள் இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்துள்ளார். பயண வழியில் அவர் வெறும் பிஸ்கட்டுக்களை மட்டுமே உணவாக சாப்பிட்டுள்ளார்.
4 நாட்கள், 1200 கிமீ பயணம், வெறும் பிஸ்கட் மட்டுமே உணவாக கொண்டு சொந்த ஊர் வந்த அவரை அவரது உறவினர்கள் வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.