திமுக துணை பொதுசெயலாளர் ஆனார் கனிமொழி! – திமுகவினர் கொண்டாட்டம்!

ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (11:19 IST)
திமுக துணை பொதுசெயலாளர் பதவிக்கான இடம் காலியாக இருந்த நிலையில் அந்த பதவிக்கு தற்போது கனிமொழி தேர்வாகியுள்ளார்.

திமுக கட்சி விதிகளின்படி, கட்சிக்கு ஒரு பொதுசெயலாளரும், 5 துணை பொது செயலாளரும் இருக்க வேண்டும். இந்த 5 துணை பொதுசெயலாளர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும். முன்னதாக இந்த துணை பொதுசெயலாளர் பதவியில் சுப்புலெட்சுமி ஜெகதீசன் இருந்தார்.

ALSO READ: எனது ஆதரவு இவருக்கு தான்.. காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து கார்த்திக் சிதம்பரம்

சமீபத்தில் வயது மூப்பு காரணமாக அவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து காலியான துணை பொதுசெயலாளர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலும் திமுக எம்.பி கனிமொழி இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தது.

இன்று அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக கனிமொழி திமுகவின் துணை பொதுசெயலாளராக அறிவிக்கப்பட்டார். முதலமைச்சரும், திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால் திமுகவினர் கனிமொழிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்