ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும் என தெரிவித்தார். மேலும், தனது அரசியல் நிலைப்பாட்டை ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாகவும் புதிய கட்சி துவங்குவேனா என போக போக தெரியும் எனவும் கூறினார்.
இதனிடையே இது குறித்து கனிமொழி கூறியதாவது, தேர்தலில் அவர் எப்படி செயல்படுவது என்பது அவரது முடிவு. இதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. இது ஜனநாயக நாடு, அதனால் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். அதுபற்றி கருத்து கூற வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.