அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவுக்கு முன்பாக எடுத்துக் கொண்டால் அம்மை கொப்பளங்கள் குறையும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது.
பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெய்யை தடவ வலி குணமாகும். ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம் இவற்றை நன்றாக தூள் செய்து உணவுக்கு முன்னர் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட அஜீரணம் குணமாகும் .
ஜாதிக்காய், சுக்கு ஓவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்து நன்கு தூளாக்கி வைத்துக் கொண்டு அரை கிராம் அளவு எடுத்து அதனுடன் கால் கிராம் சர்க்கரை சேர்த்து உணவுக்கு முன்னர் சேர்த்து உண்ம குடல் வாயு குணமாகும்.