மினி கலைஞர், மினியேச்சர் கலைஞர் யார் தெரியுமா?: விவரிக்கும் துரைமுருகன்!

செவ்வாய், 6 ஜூன் 2017 (10:25 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கடந்த 3-ஆம் தேதி ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தை அடுத்து திமுக மகளிரணி சார்பில் கருணாநிதி வைரவிழா கருத்தரங்கம் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


 
 
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு திமுக முதன்மை செயலாளர்  துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
இந்த விழாவில் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் கனிமொழி குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். கனிமொழியைச் சிறு குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும். இப்போதும் கனிமொழியைக் குழந்தையாகவே பார்க்கிறேன்.
 
தலைவரைப்போல் அனைத்துவிதங்களிலும் திறமையானவர். கவிதை, கட்டுரை, நாடாளுமன்ற விவாதம், ஆங்கிலப் புலமை என்று அனைத்திலும் திறம்பட செயல் ஆற்றுபவர். தலைவரின் மகள் என்ற தலைக்கனம் இல்லாதவர். ஆக மொத்தத்தில், கனிமொழி ஒரு மினி கலைஞர், மினியேச்சர் ஆஃப் கலைஞர் என்றார் துரைமுருகன். இந்த கருத்தரங்கில் கருணாநிதியை பற்றி கனிமொழி எழுதிய மௌனம் என்ற கவிதை அதிகமாக பேசப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்