தமிழகத்தின் முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் இன்று வரது கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளும் விமரிசையாக கொண்டாடப்படவில்லை. மாறாக அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தற்போதைய தெலுங்கானா ஆளுனருமான தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் ” தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். “ என தெரிவித்துள்ளார்.