கமலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ரஜினி ஏன் பங்கேற்கவில்லை?

ஞாயிறு, 20 மே 2018 (11:03 IST)
கமலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ரஜினி ஏன் பங்கேற்கவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது.
 
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு ரஜினி, விஜயகாந்த், தமிழிசை, டிடிவி தினகரன், வேல்முருகன், ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
 
கமல் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று திநகரில் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ், தினகரன் கட்சியை சார்ந்த தங்கதமிழ்செல்வன், நடிகர் நாசர், நடிகர் டி.ராஜேந்தர், அய்யாக்கண்ணு, பி.ஆர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
இந்த கூட்டத்தில் திமுக தோழமைக் கட்சிகள் கலந்து கொள்ளப்போவதில்லை என ஸ்டாலின் கூறியதால், அழைப்பு விடப்பட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
 
இக்கூட்டத்தில் ரஜினி கலந்து கொள்ளாததற்கு கமலிடன் காரணம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல், ரஜினிக்கு நான் அழைப்பு விடுத்தேன். அவர் என்னிடம் கமல் நீங்கள் கட்சி ஆரம்பித்துவிட்டீர்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை. கட்சியே ஆரம்பிக்காத நான் கலந்துக்கிட்டா என்னை ஏன் அழைத்தீர்கள் என்று உங்களுக்குக் கேள்வி வரலாம்னு சொன்னார். 
இக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற ஆணையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்