பிரபல நடிகரான கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி மூலமாக அரசியலிலும் நுழைந்து செயலாற்றி வருகிறார். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் ம.நீ.ம போட்டியிட்ட நிலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.நீ.ம பங்கேற்கவில்லை. மேலும் கமல்ஹாசன் தனது கட்சி ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கினார். இதனால் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் இணைய உள்ளதாக பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மு.க.ஸ்டாலின் புகைப்பட தொகுப்பு கண்காட்சி தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் இந்த கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தின் மிகசிறந்த அரசியல் தலைவரின் மகனாகவும், அரசியல் தலைவராகவும் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்களாக உள்ளதாக பேசியுள்ளார்.