ஆஹா.. ஜெயிச்சிடுவோம் போல இருக்கே..! – வாக்கு எண்ணும் மையம் விரைந்த கமல்ஹாசன், உதயநிதி..!

ஞாயிறு, 2 மே 2021 (10:24 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் முன்னணி நிலவரங்களை காண அரசியல் பிரபலங்கள் வாக்கு எண்ணும் மையம் நோக்கி படையெடுத்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகள் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கோவை தெற்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு கமல்ஹாசனும், சேப்பாக்கம் வாக்கு எண்ணும் மையத்திற்கு உதயநிதி ஸ்டாலினும் விரைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்