ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “இதை புரிந்து கொள்ள ஆஷிபா நம் சொந்த மகளாக இருக்க வேண்டுமா? அவள் என் மகளாகவும் இருக்கலாம். ஒரு மனிதனாக, தந்தையாக, ஒரு குடிமகனாக ஆஷிபாவை காப்பாற்ற முடியாமல் போனதற்காக கோபப்படுகிறேன். மன்னித்துவிடு குழந்தையே, உனக்கு பாதுகாப்பான உலகத்தை நாங்கள் உருவாக்கவில்லை. உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும், நியாயத்திற்காகவும் நான் போராடுவேன். உன்னை நினைத்து வருந்துகிறோம். உன்னை மறக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.