கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி சின்னம் சுடப்பட்டதா?

வியாழன், 22 பிப்ரவரி 2018 (09:38 IST)
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மைய்யதின் இணைந்த கரங்கள் சின்னத்திற்கு நெருக்கமாக ஏற்கனவே சில கட்சிகள் மற்றும் இயக்கங்கள சின்னம் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.


 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன் பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
 
இந்நிலையில், இணைந்த கரங்கள் போன்ற சின்னம் ஏற்கனவே, தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFPE) மற்றும் தமிழறை பாசறை போன்ற அமைப்புகள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

 
ஆனால், அந்த சின்னத்தில் இடது கைகள் இணைந்துள்ளன. கமல்ஹாசன் அதில் சற்று மாற்றம் செய்து வலது கரங்கள் இணைந்துள்ளதாக வடிவமைத்துள்ளார். எனவே, அது வேறு.. இது வேறு என கமல்ஹாசனின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
 
எப்படியிருந்தாலும், ஏற்கனவே இருந்த சின்னத்தைதான் கமல்ஹாசன் காப்பி அடித்துள்ளார் என அவரின் அரசியல் வருகையை விரும்பாதவர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்