கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து தற்போது அவரும் ஒரு தயாரிப்பாளராகி படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் ஷங்கர் ராம்சரண் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, இப்போது இந்தியன் 2 ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் வட இந்தியர் போல உடை அணிந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.