வதந்திகளை நம்ப வேண்டாம்: கமல்ஹாசனின் குழப்பமான டுவீட்

ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (08:00 IST)
கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலிலும், 20 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது கட்சி தனித்தோ அல்லது திமுக இல்லாத காங்கிரஸ் கூட்டணியோ இணைந்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்றிரவு ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில், 'மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளைநமதே. என்று கூறியுள்ளார். இந்த டுவீட்டில் இருந்து கமல்ஹாசனின் கட்சி தனித்து போட்டியிடுவது உறுதி என தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் தனது டுவீட்டில் கூறிய வதந்தி என்ன என்று அவருடைய கட்சியினர்களுக்கு கூட புரியவில்லை. கமல்ஹாசன் கூறியது போல் எந்த வதந்தியும் பரவியது போல் தெரியவில்லை என்றும், பரவாத வதந்திக்கு கமல்ஹாசன் புரியாத விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் @maiamofficial உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்,
நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளைநமதே.

— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்