நம் மீது கை வைக்க நினைத்தால்.. கமல்ஹாசன் ட்விட்..!

திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:25 IST)
நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாம் திரும்ப கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கைச்சின்னத்தில் வாக்களித்தாலே போதும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
நேற்று அவருடைய பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: 
 
நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்! 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்