மகாபாரதம் விவகாரம்: மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனுதாக்கல்

வியாழன், 4 மே 2017 (06:55 IST)
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், மகாபாரதம் குறித்து கூறிய ஒரு கருத்து இந்து மதத்தை அவமதிப்பாக இருப்பதாக ஆதிநாதர் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் கமல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்



 


இந்த மனு வள்ளியூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மே 5ஆம் தேதி நீதிமன்றத்தில் கமல் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை மே 5ஆம் தேதி நீதிமன்றத்தில் கமல் ஆஜராக வேண்டிய நிலையில் தற்போது அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தன் மீதான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், வழக்கில் இருந்து ஆஜராவதில் இருந்தும் விடுவிக்க கோரியும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்