இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை திட்டத்தை ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து கமல்ஹாசன் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ஸ்டாலினுக்கு நாங்கள்தான் டயலாக் சொல்லிக்கொடுத்தது போல திட்டங்களை அறிவித்து வருகிறார். இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று அறிவித்ததை, திமுக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். எங்கள் காகிதங்கள் பறந்து சென்று துண்டு சீட்டுகளாக மாறுகின்றன எனக் கூறியுள்ளார்.