100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிய ஸ்டாலின் !
ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:16 IST)
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் உள்ள மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 90 அடி உயர் கொடிக்கம்பத்தில் தொடக்க விழா நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை ஏற்றினார்.
இக்கூட்டத்தில் தமிழகம் எங்குள்ள திமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து திமுகவினர் ஹேஸ்டேக் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். மேலும் ஸ்டாலின் கொடியேற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இன்று திமுக காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.