இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும்: கமல்ஹாசன் ஆவேச டுவீட்

ஞாயிறு, 16 மே 2021 (15:28 IST)
நேற்று விழுப்புரம் அருகே தலித் பெரியவர்களை காலில் விழச் செய்த கொடூர சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு இயக்குனர் பா ரஞ்சித் உள்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தார்கள். இதனை அடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து என் காலில் விழ வைத்த ஒரு சிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது 
 
இந்த சம்பவம் குறித்து அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்