ஏழாம் அறிவு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹாசன். இப்படத்தை அடுத்து, விஜயுடன் புலி, விஷாலுடன் பூஜை, அஜித்துடன் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
சமீபத்தில் இவர் ஒரு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் நடித்த படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கலாக உள்ளது. ஆனால் தொற்று முடியும்வரையில் தாமதிக்கவும் முடியாது. முகக்கவசம் அணியாமலும் அரங்கில் இருக்க முடியாது. மற்றவர்களைப் போல் நானும் பல பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறேன். கொரொனா கால ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.