சிபிசிஐடி விசாரணையே வேஸ்ட்: கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் ஆவேசம்!
செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:35 IST)
சிபிசிஐடி விசாரணை வேஸ்ட் கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் மரணமடைந்த மாணவியின் தாயார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரது தாயார் செல்வி மாணவி குறித்த அனைத்து ஆவணங்களையும் தனக்கு வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவர் கேட்ட ஆவணங்களை தர முடியாது என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
இதனையடுத்து அவரை செய்தியாளர்களை மாணவியின் தாயார் சந்தித்தபோது சிபிசிஐடி விசாரணையே வேஸ்ட் என்றும் அவர்கள் கொலைகாரனுக்கு பின்னே நிற்கிறார்கள் என்றும் நான் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் தரவில்லை என்றும் அவர் கூறினார்
மேலும் பள்ளி விடுதியில் எந்த செல்போனையும் எனது மகள் பயன்படுத்தவில்லை என்றும் எங்களிடம் பேசுவதற்கு கூட ஆசிரியர்களின் செல்போன்களைத்தான் அவர் பயன்படுத்தினார் என்றும் தெரிவித்தார்.