கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின்: எதிர்ப்பு தெரிவித்து மாணவி தாயார் மனு!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (12:00 IST)
கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணையின்போது எதிர்ப்பு தெரிவித்து மரணமடைந்த மாணவியின் தாயார் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர் 
 
இவர்கள் 5 பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாயார் தனது வக்கீல் காசிவிசுவநாதன் மூலம் மனுதாக்கல் செய்துள்ளார் 
 
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதத்திற்கு பின் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்